யாழில் மர்ம பொருட்கள் வெடிப்பு: சிறுவர்கள் குறித்து பெற்றோர்கள் கவனம் வேண்டும்

வடக்கு, கிழக்கு பகுதிகளில் சிறுவர்கள் மர்மப் பொருட்களை கையாள்வதைத் தடுப்பது தொடர்பாக பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என பொலிஸார் அறிவுறுத்தல் விடுத்துள்ளனர்.

அண்மைக்காலமாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் சிறுவர்கள் நிலத்திலிருந்து கண்டெடுத்த பொருட்களை கையாள முற்பட்டபோது இடம்பெற்ற வெடிச் சம்பவங்களில் உயிரிழப்புக்களும் ஏற்பட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக சாவகச்சேரி, வவுனியா, புளியங்குளம், அம்பாறை போன்ற பிரதேசங்களில் இத்தகைய சம்பவங்கள் அதிகம் இடம்பெறுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெற்றோர் இந்த விடயம் தொடர்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும் எனவும் பொலிஸ் அத்தியட்சகர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறுவர்கள் விளையாடும் இடங்களை சுத்தமாக வைத்திருப்பதுடன் நிலத்திலிருந்து எடுக்கப்படுகின்ற இரும்புப் பொருட்கள் மற்றும் மர்மப் பொருட்களை கையாள வேண்டாம் என சிறுவர்களை அறிவுறுத்த வேண்டியது பெற்றோரின் கடமை என அவர் கூறியுள்ளார்.

அவ்வாறான பொருட்கள் கிடைத்தால் அதற்கு சேதம் விளைவிக்க முற்படாதுஇ பெரியவர்களுக்கு தெரியப்படுத்துமாறு சிறுவர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட வேண்டும் எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply