வடபகுதி மக்களை அரசாங்கம் மூன்றாம் தரப்பு பிரஜைகளாகவே கருதுகிறது!

வடபகுதி மக்களை அரசாங்கம் மூன்றாம் தரப்பு பிரஜைகளாக மதிப்பிடுவதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றஞ் சுமத்தியுள்ளது.

இந்த குற்றச்சாட்டினை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ முன்வைத்துள்ளார்.

இதனாலேயே வட மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டை, அளுத்வெவ பகுதியில் நடைபெற்ற நிகழ்வின் போதே, அவர் இதனைக் கூறினார்.

வடக்கு, கிழக்கு மக்களுக்காக கொண்டுவரப்பட்ட மாகாண சபை முறைமை நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படுகின்றது.

எனினும் யுத்தம் நிறைவடைந்து மூன்று வருடங்கள் கடந்துள்ள போதும் வடபகுதியில் மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் தவறியுள்ளதாக சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.

வடபகுதி மக்களை மூன்றாம் தரப் பிரஜைகளாக கருவதாலேயே அவர்கள் தமது வாக்குரிமையை பயன்படுத்த அனுமதிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply