சுகாதாரம், கல்விக்கு நிதி ஒதுக்குவதில் இலங்கை முன்னிலை – ஜனாதிபதி பெருமிதம்
சர்வதேச நாடுகளுடன் ஒப்பிடும் போது இலங்கை மக்களின் சுகாதாரம், கல்வி என்பனவற்றிற்கு அதிக நிதி ஒதுக்கீட்டை செய்வதன் மூலம் இலங்கை முன்னிலையில் உள்ளதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
சர்வதேச தாதியர் தினத்தை நினைவுகூரும் நிகழ்வு நேற்றைய தினம் அலரிமாளிகையில் இடம்பெற்ற போது இந்த தகவலை ஜனாதிபதி தெரிவித்தார்.
அரசாங்கத்தால் வழங்கப்படும் நிவாரணங்கள் வரையறைக்கு இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
நிவாரணங்களை வழங்குவதன் காரணமாக நாம் அபிவிருத்தி நடவடிக்கைகளை பின்தள்ள முடியாது என தெரிவித்த அவர், பொதுமக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply