காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை உற்பத்திகளுக்கு தயாராகிறது
காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் உற்பத்திகள் இந்த வருட இறுதியில் ஆரம்பிக்கப்படவுள்ளன.
இந்த தகவலை அரச சொத்து மற்றும் கைத்தொழில் அபிவிருத்தித்துறை அமைச்சின் செயலாளர் விலி கமகே தெரிவித்துள்ளார்.
காங்கேசன்துறை சீமெந்து ஆலை தமது பணிகளை ஆரம்பிக்கும் போது, வடக்கு கிழக்கு உட்பட்ட இடங்களின் கட்டுமானப் பணிகளுக்கு அது பாரியளவில் உதவும் என வலி கமகே குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆலையில் ஒரு மணித்தியாலத்துக்கு 2600 சீமெந்து பொதிகளை உற்பத்தி செய்யமுடியும். இதன்படி வருடத்தில் 249. 600 மெற்றிக் தொன் சீமெந்து உற்பத்தி செய்யப்படும் எனவும் இதன்மூலம் வருடம் ஒன்றுக்கு 90 மில்லியன் ரூபாய்களை வருமானமாக எதிர்ப்பார்ப்பதாகவும் விலி கமகே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை இந்த சீமெந்து உற்பத்திக்கான முழுமை மூலப்பொருட்களும் யாழ்ப்பாணம், மன்னார், மற்றும் புத்தளம் ஆகிய இடங்களில் இருந்து பெற்றுக்கொள்ளப்படவுள்ளன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1950ம் ஆண்டில், முன்னாள் கைத்தொழில் அமைச்சராக இருந்த ஜி.ஜி. பொன்னம்பலத்தினால் அமைக்கப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை போர் காரணமாக சேதமடைந்தததையடுத்து, இயங்காமல் இருந்து வந்தது. போர் முடிவடைந்தததையடுத்து தற்போது புனரமைக்கப்பட்டு வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply