கொழும்பில் 1980களில் நடாத்தப்பட்ட தாக்குதல்களுக்கு இந்தியா உதவியது
கொழும்பில் 1980களின் நடுப்பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதல்களுக்குத் திட்டமிடுதல் மற்றும் நிறைவேற்றுதலில் இந்தியப் புலனாய்வு அமைப்புகள் பாரிய பங்களிப்பை வழங்கியதாக ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல விடுதியில் நேற்று மாலை நடைபெற்ற ´கோட்டாவின் போர்´நூலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் வெளியிட்டு வைத்தார். இங்கு உரையாற்றிய ஜனாதிபதி செயலாளர், இலங்கையில் இந்தியாவின் பங்கு தொடர்பாக தீவிரமான விவாதம் நடத்தப்படவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இந்தியத் தூதுவர் கே. அசோக்கோத்தாவும் கலந்து கொண்ட இந்நிகழ்வில், அவர் மேலும் தெரிவிக்கையில், 2009 ஏப்ரல் மாதம் இந்தியா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய நாடுகள் போரை நிறுத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்விற்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்தன. ஆனால் அவர் வெளிநாட்டு அழுத்தங்களைக் கண்டுகொள்ளவில்லை.
இரகசியமான சந்திப்புக்கள் நடைபெற்றன. இந்திய பாராளுமன்றத் தேர்தலுக்கு தமிழ் நாட்டில் வாக்களிப்பு இடம்பெறுவதற்கு முன்னர், 2009 ஏப்ரலில் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் தலைமையிலான குழு இலங்கை வந்தது. வெவ்வேறு காரணங்களைக் கூறிக் கொண்டு பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களும் இலங்கை வந்தனர். இவர்களின் எண்ணம் எல்லாமே போரை நிறுத்துவதாகவே இருந்தது.
வடமராட்சி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது, இந்தியப் பிரதமராக இருந்த ராஜீவ்காந்த அந்த நடவடிக்கைகளுக்கெதிராக கடுமையான அறிக்கை வெளியிட்டார். இலங்கை அப்போதே தீவிரவாதத்தை ஒழித்திருக்க முடியும். ஆனால் இந்தியத் தூதுவராக இருந்த கே.என்.டிக்சித் வலுவான தலையீடு செய்தார். அந்த நடவடிக்கை தொடர்ந்திருந்தால் இலங்கை இரண்டு பத்தாண்டுகளுக்கு முன்னரே போரை முடிவுக்கு கொண்டு வந்திருக்கும்.
இராணுவ நடவடிக்கை தொடர்ந்தால் எதிர்பாராத விளைவுகள் ஏற்படுத்தும் என அவர் எச்சரித்திருந்தார். அதற்கு ஜே.ஆர் ஜெயவர்த்தனா எதிர்பாராத விளைவுகள் என்றால் என்னவென்று கேட்டபோது, இலங்கையைத் துண்டாடுவதற்கு இந்தியா விடுதலைப்புலிகளுக்கு என்று கே.என்.டிக்சித் பதிலளித்திருந்தார். இவ்வாறு லலித் வீரதுங்க குறிப்பிட்டார்.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply