கூட்டமைப்பு தெரிவுக் குழுவில் இணையுமா? இல்லையா? நாளை தெரியும்
நாடாளுமன்றத் தெரிவுக் குழு தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாளைய தினம் நாடாளுமன்றத்தில் விசேட அறிவிப்பு ஒன்றை விடுக்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தனால் இந்த அறிவிப்பு முன்வைக்கப்படவிருப்பதாக கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் போது நாடாளுமன்றத் தெரிவிக்குழுவில் இணைவதற்கு, தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் முன்வைக்கும் நிபந்தனைகள் குறித்து அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை நாளைய தினம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றக் உறுப்பினர்களின் விசேட சந்திப்பு ஒன்று நாளைய தினம் நடைபெறவுள்ளது.
இதன்போது நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைவதா? இல்லையா? என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply