தமிழத் தேசியக் கூட்டமைப்பினருடன் அசோக் கே காந்தா சந்திப்பு

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தாவுக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் சந்திப்பொன்று இன்று பகல் மட்டக்களப்பில் நடைபெற்றது.மட்டக்களப்புக்கு விஜயம் செய்த இந்திய உயர்ஸ்தானிகரை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் கல்லடி கிறீன் கார்டன் விருந்தினர் விடுதியில் சந்தித்தனர்.

இச் சந்திப்பில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்றக் குழுத் தலைவருமான இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, பொன் செல்வராசா, சரவணபவன், பா.அரியநேத்திரன், சுமந்திரன், சீ.யோகேஸ்வரன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கனகசபை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இச் சந்திப்பின் போது, பல்வேறுபட்ட அரசியல், பொது விடயங்கள், பொது மக்கள் சார் பிரச்சினைகள் ஆராயப்பட்டுள்ளன. இச் சந்திப்பினைத் தொடர்ந்து மதிய போசன விருந்திலும் இந்திய உயர்ஸ்தானிகர் கலந்து கொண்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply