எகிப்தின் அடுத்த ஜனாதிபதி யார் ? வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பம்

எகிப்தில் சர்வாதிகார ஆட்சிக்கு பின்னர் இடம்பெற்ற முதலாவது ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

முன்னர், ஜனாதிபதியாக  இருந்த ஹோஸ்னி முபாரக்கின் சர்வாதிகார ஆட்சி கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது. எனவே புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடந்தது.

அதில் 13 பேர் போட்டியிட்டனர். நேற்று முன்தினம் தொடங்கிய வாக்குப்பதிவு நேற்று வரை 2 நாட்கள் நடந்தது.

வாக்குப் பதிவு முடிந்ததும் வாக்குகளை எண்ணும் பணி உடனே தொடங்கியது. ஆனால் முடிவுகள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. இதற்கிடையே முஸ்லிம் சகோதரத்துவ கட்சி வேட்பாளர்கள் முன்னணியில் இருப்பதாக அறிவித்துள்ளது.

எகிப்து அரசியல் சட்டப்படி 50 சதவீதம் வாக்குகளைப் பெறுபவர்தான் ஜனாதிபதியாக முடியும். இந்த தேர்தலில் 50 சதவீத வாக்குகளை யாரும் பெற முடியாவிட்டால் முதல் 2 இடங்களை பிடித்தவர்கள் இடையே இரண்டாம் கட்ட தேர்தல் நடத்தப்படும். அதில் வெற்றி பெறுபவர் புதிய ஜனாதிபதியாக அறிவிக்கப்படுவார்.

இதற்கிடையே முடிவுகள் வருகிற 29-ந்திகதி அறிவிக்கப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது. புதிய அதிபர் வருகிற ஜூலை 1-ந்திகதி பதவி ஏற்பார் என தெரிகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply