இலங்கையின் மனித உரிமைப் பிரச்சினை தொடர்பில் அமெரிக்கா விசனம்
அமெரிக்க அரசுத்துறையினால் வெளியிடப்பட்டுள்ள உலக நாடுகள் குறித்த வருடாந்த அறிக்கையில் இலங்கை மற்றும் இந்திய நிலவரம் குறித்து கடுமையான விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் மிகவும் மோசமான மனித உரிமை பிரச்சினைகளாக, அரசாங்கப் படைகளாலும், துணைப்படைகளாலும் மேற்கொள்ளப்படும் சட்டத்துக்கு விரோதமான கொலைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.
பெரும்பாலும் தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் இடங்களில் நடக்கும் இப்படியான கொலைகள், அரசியல் நோக்கம் கொண்டவை என்றும், சிவில் அமைப்புக்களின் செயற்பாட்டாளர்களும், விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று பார்க்கப்படுபவர்களும், செய்தியாளர்களும் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுபவர்களால் இலக்கு வைக்கப்படுவதாகவும் அந்த அறிக்கை கூறியுள்ளது.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் குடும்பத்தினர் அரசாங்கத்தில் நிறைந்திருப்பதாகவும் அமெரிக்க அரசுத்துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
இலங்கையில் நடந்த தேர்தல் குறித்து சந்தேகம் வெளியிட்டுள்ள அரசுத்துறை, காணாமல் போன ஆயிரக்கணக்கானவர்கள் தொடர்பில் எந்த வகையிலான பொறுப்புக்கூறலுக்கும் அங்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.
2010 ஆம் ஆண்டி அங்கு நடமாடுவதற்கான மக்களின் சுதந்திரமும் மட்டுப்படுத்தப்பட்டிருந்ததாகவும் அது கூறியுள்ளது.
மனித உரிமை துஷ்பிரயோகங்களில் ஈடுபட்ட மிகவும் சொற்ப அளவிலான அதிகாரிகளையே அரசாங்கம் தண்டித்துள்ளதாகவும் அமெரிக்க அறிக்கை கூறியுள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை, அங்கு பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினரின், சட்டத்துக்கு விரோதமான கொலைகள், பாலியல் வல்லுறவு மற்றும் துஷ்பிரயோகங்கள், அரசாங்கத்தின் பல மட்டங்களில் காணப்படுகின்ற ஊழல், சமூக வன்முறைகள், பிரிவினைவாதம் மற்றும் கிளர்ச்சி ஆகியவற்றை அமெரிக்க அரசுத்துறை வரிசைப்படுத்தியுள்ளது.
சாதி ரீதியிலான புறக்கணிப்பு, எச் ஐ வி நோயாளர்கள் புறக்கணிப்பு, சிறார் தொழிலாளர் போன்ற பிரச்சினைகளையும் இந்தியா தொடர்பில் அமெரிக்க அரசுத்துறை குறிப்பிட்டுள்ளது.
காஷ்மீர் தீவிரவாதிகளும், வடகிழக்கு மாநில கிளர்ச்சிக்காரர்கள், நக்சலைட்டுக்கள் போன்றவர்களும் கடுமையான வன்முறைகளில் ஈடுபடுவதாகவும் அது குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply