ஸ்கொட்ந்து தனி நாடாக செல்ல வேண்டுமா? வேண்டாமா? மக்களிடம் வாக்கெடுப்பு
ஐக்கிய ராஜ்ஜியத்திலிருந்து பிரிந்து ஸ்கொட்ந்து தனி நாடாக செல்ல வேண்டுமா? வேண்டாமா? என்று அப்பகுதி மக்களிடம் கேட்டு நடத்தப்படக்கூடிய கருத்தறியும் வாக்கெடுப்பில் தனி நாடாக பிரிவதற்கு ஆதரவாக மக்கள் வாக்களிக்கமென்கிற பிரச்சாரத்தை ஸ்காட்லாந்தின் முதன்மை அமைச்சரான அலெக்ஸ் சல்மண்ட் ஆரம்பித்து வைத்துள்ளார்.
ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சியின் தலைவராக இருக்கின்ற முதன்மை அமைச்சர் சல்மண்ட், ஸ்கொட்லாந்தின் எதிர்காலம் பற்றி முடிவெடுக்கக்கூடிய நல்ல நிலையில் தற்போது ஸ்கொட்லாந்து மக்கள் இருக்கிறார்கள் எனக் கூறினார்.
இந்த பிரச்சாரத்தின் ஆரம்ப விழாவில் ஸ்கோட்டிஷ் நேஷனல் கட்சியுடன் இணைந்து ஸ்கொட்டிஷ் கிரீன்ஸ் உள்ளிட்ட சிறிய கட்சியினர் கலந்துகொண்டுள்ளனர்.
இங்கிலாந்தையும் ஸ்கொட்லாந்தையும் முந்நூறு வருட காலமாக ஒரே நாடாக வைத்திருக்கும் ஆக்ட் ஆப் யூனியன் என்ற சாசனத்தை ரத்து செய்ய வேண்டும் என இவர்கள் கோருகின்றனர்.
2014ஆம் ஆண்டு இந்த மக்கள் கருத்தறியும்ன் வாக்கெடுப்பு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்கொட்லாந்து ஐக்கிய ராஜ்ஜியத்துக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று விரும்பும் பிரிவினர் தமது பிரச்சாரத்தை அடுத்த மாதம் ஆரம்பிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனிநாடு கோரிக்கையை ஆதரிக்கும் ஒரு பிரகடனத்தில் ஸ்கொட்லாந்து மக்கள் பத்து லட்சம் பேர் கையொப்பமிட வேண்டும் என பிரச்சார துவக்க நிகழ்ச்சியில்
ஸ்கொட்டிஷ் தேசியக் கட்சி கோரியுள்ளது.
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply