இறுதி யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்களின் வாழ்வாதாரத்துக்கான ஐநாவின் திட்டத்தில் பற்றாக்குறை

இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளின் புனர்வாழ்வு நடவடிக்கைகளுக்காக 147 மில்லியன் டொலர்களை திரட்டும் ஐக்கிய நாடுகள் சபையின் திட்டத்தில் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த திட்டம் குறித்து ஐக்கிய நாடுகள் சபை அறிவித்ததில் இருந்து இதுவரையில் இந்த நிதியில் 13 சதவீதமான நிதியே தமது கிளை நிறுவனங்களின் ஊடாக திரட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இதுவரையில் 18.7 மில்லியன் டொலர்கள் மாத்திரமே சேகரிக்கப்பட்டுள்ளன.

இறுதி யுத்தத்தின் போது இடம்பெயர்ந்தவர்களின் வாழ்வாதாரத்துக்காக மனிதாபிமான அடிப்படையில் இந்த நிதி குறித்து ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்டது.

எனினும் இது போதிய வரவேற்பை பெறவில்லை என விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply