யுத்தத்தின் பின்னரான பாரிய தாக்குதல்: 13 சிறுவர்கள் உற்பட 50 பேர் பலி
சிரியாவின் எதிர்தரப்பினரின் ஆதிக்கம் மேலேங்கியுள்ள ஹொம்ஸ் நகரில் 13 சிறுவர்கள் உற்பட 50 பேர் வரை கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அரச படையினர்கள் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக சிரிய எதிர் தரப்பினர் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை உறுதிப்படுத்தப்படுமாயின், கடந்த ஏப்ரல் மாதம் யுத்த நிறுத்தம் அமுல்படுத்தப்பட்ட பின்னர் நடத்தப்பட்ட பாரிய தாக்குதலாக இது பதிவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே சில நகரங்களின் முக்கிய பகுதிகளில் எதிர்தரப்பினரின் கட்டுப்பாட்டில் உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கூறியுள்ளார்.
சிரியாவின் நிலைமை மிகவும் கடுமையான ஒன்றாக தொடர்ந்தும் உள்ளதாகவும் பாதுகாப்பு பேரவைக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply