மட்டக்களப்பு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்து அசோக் கே காந்தா ஆராய்வு

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் அசோக் கே காந்தா நேற்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்து மட்டக்களப்பு – திருகோணமலை ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை தலைமையிலான சமயங்களின் சமாதானத்துக்கான ஒன்றியத்தின் பிரதிநிதிகள் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசியுள்ளார்.

மட்டக்களப்பு மக்கள் எதிர்நோக்குகின்ற பல்வேறு பிரச்சினைகள் குறித்து அவர் அவர்களிடம் பேசியுள்ளார்.

நீண்டகாலமாக விசாரணைக்காகக் காத்திருக்கும் கைதிகளின் விவகாரம், காணிப் பிரச்சினை, முஸ்லிம்களின் மத வழிபாட்டிடங்கள் தாக்கப்படுவது குறித்த விவகாரம் ஆகியவை பற்றி பொதுமக்கள் பிரதிநிதிகள் அவரிடம் எடுத்துக் கூறியுள்ளனர்.

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை அமல்படுத்தப்பட வேண்டியதன் அவசியம் குறித்து தாம் இந்திய தூதுவரிடம் வலியுறுத்தியதாக ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை பீபீசியிடம் தெரிவித்தார்.

அதேவேளை சம்பூர் மக்களின் மீள்குடியேற்றம் குறித்தும், தாம் அவரிடம் வலியுறுத்தியதாகவும் ஆயர் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply