இந்திய உயர்மட்ட வர்த்தக குழு இலங்கை வருகிறது
இந்தியாவின் உயர்மட்ட வர்த்தக குழு ஒன்று அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளது.
இலங்கையில் நடைபெறவுள்ள வர்த்தக சந்தை ஒன்றில் பங்கு பற்றுவதற்காக அந்த குழு இலங்கை வருகிறது.
100க்கும் அதிகமான இந்திய நிறுவனங்களின் பிரதிநிதிகள் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, வர்த்தக அமைச்சின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் சிறந்த வர்த்தக உறவை பேணவும், புதிய முதலீடுகளை அதிகரித்துக் கொள்ளவும் இந்த உயர்மட்டக் குழுவின் வருகை ஒத்துழைப்பாக இருக்கும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply