அகதிகளுக்கு எதிராக அவுஸ்திரேலியா செயற்படக் கூடாது
இலங்கையில் இருந்து அகதிகள் வெளியேறுவதை அவுஸ்திரேலியா தடுக்க முற்பட கூடாது என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
அதன் நிறைவேற்று பணிப்பாளர் பில் லின்ச் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் இருந்து அகதிகள் அவர்களின் விருப்பத்தின் பேரிலேயே வெளியேறுகின்றனர்.
இந்த நிலையில் அவர்களை தடுக்கும் வகையில் அவுஸ்திரேலியா எந்த முயற்சிகளை மேற்கொண்டாலும், அது அகதிகளின் உரிமையை மீறும் செயலாக அமையும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் அகதிகளின் பயணத்தை தடுக்கும் பொறுட்டு, அவுஸ்திரேலியா போதிய ஒத்துழைப்பினை வழங்குவதில்லை என இலங்கை குற்றம் சுமத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply