சிரியாவிற்கு ரஷ்யா எச்சரிக்கை

சிரிய ஜனாதிபதி பசீர் அல் ஆசாத்துக்கு எதிரான உள்நாட்டு யுத்தம் வலுபெற்றுள்ள நிலையில் மேற்கத்திய நாடுகளின் தலையீடு  எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தும் என அந்த நாட்டின் வெளியுறவுதுறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனினும் ஏற்கனவே செய்துகொண்ட உடன்படிக்கையின்படி சிரியா ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது என ரஷியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில், ரஷிய வெளியுறவுதுறை விடுத்துள்ள செய்திக்குறிப்பில் ரசாயன ஆயுதங்களுக்கு தடை விதிக்கிற ஜெனிவா உடன்படிக்கையில் 1968 ஆம் ஆண்டு சிரியா கையெழுத்திட்டுள்ளது.

இதன்படி சிரியா நடந்துகொள்ள வேண்டும். இதையே ரஷியா எதிர்பார்க்கின்றது என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply