டெசோ மாநாட்டில் சரத் பவார், பரூக் அப்துல்லா பங்கேற்பு
திமுக நடத்தும் டெசோ மாநாட்டில் தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா உள்பட பலர் பங்கேற்கின்றனர்.
டெசோ அமைப்பு சார்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைப் பாதுகாப்பு மாநாடு மற்றும் ஆய்வரங்கம் ஆகஸ்ட் 12-ம் திகதி நடைபெறுகிறது.
மாநாட்டில் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரவேற்புரையாற்றுகிறார். திமுக தலைவர் கருணாநிதி தலைமை தாங்குகிறார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், ஜம்மு – காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, ஐக்கிய ஜனதா தளக் கட்சித் தலைவர் சரத் யாதவ், லோக் ஜன சக்தி தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், சமாஜவாதி கட்சி பொதுச் செயலாளர் ராம் கோபால் யாதவ் மற்றும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தோர் பங்கேற்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply