பாஸ்போர்ட், டிக்கெட் இல்லாமல் லண்டனில் இருந்து இத்தாலிக்கு விமானத்தில் ரகசியமாக சென்ற சிறுவன்
லண்டனில் நாளை ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ளன. இதையொட்டி லண்டன் முழுவதும் வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. லண்டன் விமான நிலையத்திலும் பலத்த கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. ஒலிம்பிக் போட்டிகளை சீர்குலைக்க தீவிரவாதிகள் ஊடுருவி விடக்கூடாது என்பதால் கண்காணிப்பும், பாதுகாப்பும் பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவ்வளவு கண்காணிப்புகளையும் மீறி 11 வயது சிறுவன் ஒருவன், லண்டனில் இருந்து விமானத்தில் டிக்கெட், பாஸ்போர்ட், மற்றும் ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இத்தாலி தலைநகர் ரோமுக்கு சென்று விட்டது ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
அந்த 11 வயது சிறுவன், தன் தாயாருடன் விமான நிலையப் பகுதியில் உள்ள ஒரு கடைக்கு ஷாப்பிங் வந்திருந்தான். தாய் ஷாப்பிங்கில் தீவிரமாக இருந்த போது அவன் கடையில் இருந்து வெளியேறி விமான நிலையத்துக்குள் வந்தான்.
வேடிக்கை பார்த்தப்படி சுற்றித்திரிந்த அவன் பயணிகளோடு பயணியாக ஒரு விமானத்துக்குள் ஏறிவிட்டான். சிறுவன் என்பதால் பாதுகாப்பு படையினர் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. யாரோ ஒரு பயணியின் மகன் என்று நினைத்துக் கொண்டு லேசான சோதனை நடத்தி உள்ளே விட்டுவிட்டனர்.
பாஸ்போர்ட், டிக்கெட் என்ற சோதனை எதுவும் செய்யாததால் அவன் மிக எளிதாக விமானத்துக்குள் சென்று விட்டான். அவன் ஜாலியாக நுழைந்த விமானம் லண்டனில் இருந்து ரோம் நகருக்கு செல்லும் ஜெட்௨ என்ற நிறுவனத்துக்கு சொந்தமான விமானமாகும்.
அவன் விமானத்துக்குள் நுழைந்த போதும், யாரும் அவனிடம் கேள்வி கேட்காததால் ஹாயாக போய் ஒரு இருக்கையில் உட்கார்ந்து கொண்டான். பயணிகளும் அவனை முதலில் கண்டு கொள்ளவில்லை. யாரோ ஒரு பயணியின் மகன் என்று ஒருவருக்கொருவர் நினைத்து கொண்டு அமைதியாக இருந்தனர்.
விமானம் நடு வானில் பறந்து கொண்டிருந்தபோது விமான பணிப்பெண் ஒருவர் அவனிடம் பேசிய பிறகே, அவன் எதுவும் அறியாமல் ஜாலியாக விமானத்துக்குள் வந்து இருப்பது தெரிய வந்தது. உடனடியாக இதுபற்றி லண்டன் விமான நிலையத்துக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
பலத்த பாதுகாப்பை மீறி சிறுவன் ஒருவன் லண்டன் விமானத்தில் எந்த சோதனைக்கும் உட்படாமல் சென்று கொண்டிருப்பது அதன் பிறகே அதிகாரிகளுக்கு தெரிய வந்தது.
கடும் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கண்காணிப்பு காமிரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது அந்த சிறுவன் பயணிகளுடன் சேர்ந்து மறைந்து, ரகசியமாக செல்வது தெரிந்தது. அவனிடம் லேசாக சோதனை நடத்தி விட்டு, பாஸ்போர்ட், டிக்கெட் எதுவும் கேட்காமல் விட்ட 5 ஊழியர்கள் பற்றி தெரிய வந்தது. அந்த 5 ஊழியர்களும் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply