ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்ற தேசிய திட்டத்திற்கு அனுமதி

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையில் உள்ள பரிந்துரைகளை செயற்படுத்த தேசிய வேலைத் திட்டம் ஒன்றை தயாரிக்க அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று 26ம் திகதி காலை இடம்பெற்ற போது இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரிந்துரைகளை செயற்படுத்தவென நான்கு முக்கிய விடயங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தேசிய கொள்கைக்கு ஏற்ற பரிந்துரை, இறுதி யுத்த பரிந்துரை, மனித உரிமை மற்றும் தேசிய பாதுகாப்பு பரிந்துரை, மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி பரிந்துரை என்பன அவையாகும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply