சுதந்திர கூட்டமைப்பைச் சேர்ந்த உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நால்வரின் பதவி பறிபோகிறது
மோசடி மற்றும் சிறுவர் துஸ்பிரயோகங்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் நால்வரின் கட்சி உறுப்புரிமை மற்றும் பதவிகளை இரத்து செய்ய ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு நடவடிக்கை எடுத்துள்ளது.
தங்காலை பிரதேச சபைத் தலைவர் சம்பத் சந்திரபுஸ்ப, தங்காலை நகரசபை உறுப்பினர் அஞ்சன குசும் ருவான், அக்குரஸ்ஸ பிரதேச சபைத் தலைவர் சுனில் மற்றும் அக்குரஸ்ஸ பிரதேச சபை உப தலைவர் முனிதாஸ கமகே ஆகியோரின் கட்சி உறுப்புரிமை, பதவிகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி பொதுச் செயலாளர், அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைப்படி ஐக்கய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர், அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இந்நடவடிக்கை எடுத்துள்ளார்.
இது குறித்து உள்ளூராட்சி சபை செயலாளர்கள், தெரிவத்தாட்சி அதிகாரிகள், தேர்தல்கள் செயலகம் என்பவற்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதென அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply