நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகுமாறு அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது
நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகுமாறு
பதியுதீனுக்கு இலங்கை மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.நீதிமன்றத்தை அவமதித்ததாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு விளக்கமளிக்கும் முகமாகவே அவர் நீதிமன்றத்துக்கு அழைக்கப்பட்டுள்ளார். மன்னார் மஜிஸ்திரேட் நீதவானுக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மீது குற்றஞ்சாட்டும் வழக்கு ஒன்றை 7 மூத்த சட்டத்தரணிகள் தாக்கல் செய்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்தபோதே மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவை விடுத்துள்ளது.
இதன்படி எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி அமைச்சர் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுளதாக கூறப்படுகிறது.
அதேவேளை இந்த வழக்கை தாக்கல் செய்த சட்டத்தரணிகளின் குடும்பத்தினருக்கு எந்த விதமான அச்சுறுத்தல்களையும் விடுக்கக் கூடாது என்றும், அவ்வாறு ஏதாவது முறைப்பாடு கிடைத்தால் வழக்கு முடிவடையும் வரை அமைசர் விளக்கமறியலில் இருக்க நேரும் என்றும் நீதிமன்ற உத்தரவில் கூறப்படுள்ளதாக அந்த வழக்கை தாக்கல் செய்த சட்டத்தரணி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply