வன்முறைகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை – ஒபாமா

கொலராடோ படுகொலைகளை அடுத்து துப்பாக்கி வன்முறைகளை ஒழிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியாக துப்பாக்கி வன்முறைகளை குறைப்பது குறித்து அனைத்து அரசியல் தலைவர்களுடன் இணைந்து பணியாற்றுவதாக பரக் ஒபமா கூறியுள்ளார்.

கொலராடோ மாநிலத்தின் அரோரா என்ற பகுதியிலுள்ள திரையரங்கில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் 12 பேர் கொல்லப்பட்டதுடன், 58 பேர் காயமடைந்திருந்தனர்.

இதனையடுத்து கொலராடோ மாநிலத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஒபாமா இந்த தாக்குதலில் காயமடைந்தவர்களையும், பாதிக்கப்பட்டவர்களையும் சந்தித்திருந்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply