இலங்கை சிறையிலிருந்த தமிழக மீனவர்கள் விடுதலை

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 23 பேரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வலியுறுத்தி தெரிவித்துள்ளார்.

இவர்களை இந்திய கடற்படையிடம் ஒப்படைப்பதற்கான முயற்சிகளை இலங்கையிலுள்ள இந்திய தூதரகம் மேற்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய மீனவர்களை விடுதலை செய்யுமாறு கோரி இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதேவேளை இன்று இந்திய மீன்துறை அலுவலகம் முன்பு இராமேஸ்வரம் மீனவர்கள் முற்றுகைப் போராட்டம் நடாத்தினர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply