தேசிய ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய சுவரொட்டிகள் கைப்பற்றம்
யாழ்ப்பாணம் நெல்லியடி பிரதேசத்தில் ஒட்டப்பட்டுக் கொண்டிருந்த சுவரொட்டிகள் சிலவற்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட குழுவினர் இந்த சுவரொட்டிகளை ஒட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
குறித்த சுவரொட்டிகள் தேசிய ஒற்றுமைக்கு பாதிப்பை ஏற்படுத்துவதற்கான சாத்தியம் உள்ளதால் அவற்றை பொலிஸார் கைப்பற்றியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply