புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துங்கள்! ஆஸியிடம் இலங்கை கோரிக்கை
அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்களை நாடு கடத்துமாறு இலங்கை அரசாங்கம், அவுஸ்திரேலியாவிடம் கோரியுள்ளது.
புகலிடம் கோரி அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிப்போரை நாடு கடத்துவதன் மூலம் சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க முடியும் என இலங்கைக் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக் கடற்படையினரினால் வரையறுக்கப்பட்ட அளவில் மட்டுமே புகலிடக் கோரிக்கையாளர் படகுகளை தடுக்க முடிவதாக உயர் கடற்படை அதிகாரி என்.அட்டிகல தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்பரப்பிற்கு அப்பால் ரோந்துப் பணிகளில் ஈடுபடும் வல்லமை கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக் கடற்படையினர் ரோந்துப் பணிகளுக்காக இரண்டு கப்பல்களை மட்டுமே பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மற்றுமொரு கப்பலை அவுஸ்திரேலியா வழங்கினால் அந்நாட்டு வான் கண்காணிப்பு தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தி இலங்கைக் கடற்படையினர் ரோந்துப் பணிகளை மேற்கொள்வர் என அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்த வேண்டுமாயின் இரு நாடுகளுக்கும் இடையில் உயர் மட்ட ஒத்துழைப்பு காணப்பட வேண்டுமென கடற்படைப் புலனாய்வுப் பிரிவு பொறுப்பாளர் நிசாந்த உலுகுதென்ன தெரிவித்துள்ளார்.
குறிப்பாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம், எல்லைப் பாதுகாப்பு, கரையோரப் பாதுகாப்புப் பிரிவு போன்ற பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு காணப்படு வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒருவரை நாடு கடத்துவதன் மூலம் மட்டும் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது எனவும், அதிகளவான புகலிடக் கோரிக்கையார்களை திருப்பி அனுப்புவதன் மூலம் புகலிடக் கோரிக்கையாளர் படகுகளை தடுக்க முடியும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply