வெளிநாட்டுகளில் கடற்படை தளங்களை அமைக்கும் திட்டம் இல்லை – ரஷ்யா

வெளிநாட்டில் தமது கடற்படை தளங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக வெளியான தகவலை ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு நிராகரித்துள்ளது.

1991 ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் பிளவுபட்ட பின்னர், முதல் முறையாக ரஷ்யா இவ்வாறான கடற்படைத் தளங்களை அமைக்க திட்டமிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

கியூபா, வியட்நாம் உள்ளிட்ட நாடுகளில் கடற்படை தளங்களை அமைப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளதாக ரஷ்ய கடற்படை சிரேஷ்ட அதிகாரியை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன.

எனினும் சிரேஷ்ட அதிகாரி அவ்வாறான கருத்தொன்றை வெளியிடவில்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

1991 ஆம் ஆண்டிற்கு பின்னர் நிதி பற்றாக்குறை காரணமாக வெளிநாடுகளிலுள்ள அநேகமான கடற்படைத் தளங்களை ரஷ்யா மூடியிருந்தது.

2002 ஆம் ஆண்டு வியட்நாமில் இருந்த இராணுவத் தளத்தை ரஷ்யா மூடியதுடன், உக்ரைய்ன் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் மாத்திரமே ரஷ்யாவின் படைத்தளங்கள் தற்போது செயற்பட்டு வருகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply