இந்தியா – இலங்கை உடன்படிக்கையில் இதுவரை திருப்தியில்லை

இந்தியா – இலங்கை உடன்படிக்கை ஏற்படுத்திக் கொள்ளப்பட்டு நாளையுடன் 25 வருடங்கள் நிறைவடைகின்றன.

எனினும் இந்த உடன்படிக்கை மூலம் இந்தியா தமது இலக்குகளை அடையவில்லை என இலங்கையில் நிலைகொள்ள செய்யப்பட்டிருந்த இந்திய அமைதிக் காக்கும் படையின் தலைவர் கேர்னல் அரிஹரன் தெரிவித்துள்ளார்.

இந்து இலங்கை உடன்படிக்கை தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உடன்படிக்கை மூலம் 13ம் திருத்தச் சட்டம் என்ற ஒன்று, இலங்கையின் அரசியல் அமைப்பில் அறிமுகப்படுத்தப்பட்டது.

அத்துடன், சிறுபான்மை மக்களுக்கான தீர்வுகள் குறித்தும், அதிகார பகிர்வு குறித்தும் இதில் வலியுறுத்தப்பட்டிருந்தது.

எனினும் இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு, 25 வருடங்கள் கடந்த பின்னரும், அத்துடன் யுத்தம் நிறைவடைந்த மூன்று வருடங்கள் கடந்த நிலையிலும், இன்னும் அதன் இலக்குகள் எதனையும் அடையவில்லை.

இன்னும் தமிழர்களுக்கான அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தைகள் தீர்க்கப்படாமலே உள்ளது என அரிஹரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply