வடமாகாண வைத்தியர்கள் நாளை முதல் பணி பகிஸ்கரிப்பு

வடமாகாண அரச வைத்தியர்கள் அனைவரும் நாளை முதல் தொடர்ச்சியாக பணி பகிஸ்கரிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

வடமாகாணத்திலுள்ள சகல அரச வைத்தியசாலைகளிலும் இந்த பகிஸ்கரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு உறுப்பினர் நவீன் த சொய்சா தெரிவித்தார்.

யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளருடனான பிரச்சினையே இந்த பகிஸ்கரிப்பிற்கான பிரதான காரணம் என அவர் சுட்டிக் காட்டினார்.

யாழ் போதனா வைத்தியசாலை பிரச்சினை தொடர்பில் தீர்வு முன்வைக்கப்படும் வரை தொடர்ச்சியா பணி பகிஸ்கரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நவீன் த சொய்சா குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply