சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முயன்றவர்கள், முகவர்கள் கைது
சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டிற்குச் செல்ல முயற்சித்த இருவர் மற்றும் சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு ஆட்களை அனுப்பும் முகவர்கள் இருவரும் நீர்கொழும்பு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட முகவர்களிடமிருந்து 6,98,000 ரூபா பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.
வெளிநாட்டிற்கு செல்ல முற்பட்ட இருவரும் மன்னாரைச் சேர்ந்தவர்கள் எனவும் முகவர்கள் இருவரும் நீர்கொழும்பைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸர் தெரிவித்தனர்.
அண்மையில் கடல் மார்க்கமாக பலர் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கு திட்டமிட்டுள்ளதாக பொலிஸாருக்கு அவர்கள் தகவல் வழங்கியுள்ளனர்.
இதன்படி தாம் கடற்படையினருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்கள் நால்வரும் இன்று நீர்கொழும்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply