இலங்கை இராணுவத்தைப் போல் எந்தவொரு இராணுவமும் அர்ப்பணிப்புடன் செயற்படவில்லை!

எந்தவொரு இராணுவமும் இந்தளவிற்கு மக்களுக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றியதில்லை என பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மிக நீண்ட காலமாக இடம்பெற்ற யுத்தத்தின் பின்னர் இலங்கை இராணுவத்தினர் மக்களுக்காக பாரியளவில் சேவைகளை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

12000 முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைந்த போது அவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனிப்பட்டரீதியில் உத்தரவிட்டதாக கோடாபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மன்னார் கந்தன்குளம் பகுதியில் நடைபெற்ற நிகழ்வுஒன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் எந்தவொரு இராணுவமும் மக்களுக்காக இந்தளவுதைரியத்துடன் செயற்பட்டதில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

யுத்தத்தின் பின்னர் 101 நாடுகளைச் சேர்ந்தபிரதிநிதிகள் வன்னிக்கு விஜயம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதேசத்தின் நிலைமைகளை நேரில்பார்வையிடுவதற்கு அவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகக்குறிப்பிட்டுள்ளார்.

புனரமைப்பு பணிகளில் உலகின் பல நாடுகள் ஆர்வம்காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply