ஆஸி செல்ல முயற்சித்த 103 பேர் கைது
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயற்சித்த மேலும் 103 பேர் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்றிரவு திருகோணமலை மற்றும் நீர்கொழும்பு ஆகிய கடற்பரப்புகளில் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.
திருகோணமலைக்கு கிழக்கேயுள்ள கடற்பரப்பில் படகொன்றில் பயணித்துக்கொண்டிருந்த 34 பேர் கைது செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நீர்கொழும்பு மற்றும் சிலாபம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இதேவேளை நீர்கொழும்புக்கு மேற்கேயுள்ள கடற்பரப்பில் சட்டவிரோத புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த இரண்டு படகுகளை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்த இரண்டு படகுகளிலும் முறையே 25 மற்றும் 44 புகழிடக் கோரிக்கையாளர்கள் இருந்ததாக கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய குறிப்பிட்டுள்ளார்.
கைதுசெய்யப்பட்டுள்ளவர்களை மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைப்பதற்கு இலங்கை கடற்படை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த குழுவினரை சட்டவிரோதமாக வெளிநாட்டுக்கு அனுப்பிவைப்பதற்கான வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்த மூவரும் மேலும் இருவரும் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் ஒருவரிடமிருந்து ஏழு இலட்சம் ரூபா பணம் கைப்பற்றப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply