தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் – மாகாண அதிகாரிகள் சந்திப்பு
தேர்தல் நடைபெறவுள்ள மூன்று மாகாண சபைகளிலும் உள்ள தேர்தல் அலுவலர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு இடையில் இன்று 31ம் திகதி சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.
ராஜகிரிய தேர்தல் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெறவுள்ளது.
தேர்தல் நடைபெறவுள்ள மாகாணங்களின் சிரேஸ் தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் உதவித் தேர்தல் ஆணையாளர்கள் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவுள்ளனர்.
சட்ட ரீதியில் தேர்தல் நடத்துதல் மற்றும் மாகாண தேர்தல் நடவடிக்கைகளுக்கு உத்தியோகத்தர்களை நியமிக்கும் விதம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இங்கு ஆராயப்படவுள்ளது.
விசேடமாக தேர்தல் அலுவல்களில் ஈடுபடுத்தப்படவுள்ள நபர்கள் சிங்களம் மற்றும் தமிழ் பேசக்கூடியவர்களாக இருக்க வேண்டியதன் அவசியம் தொடர்பில் இச்சந்திப்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.
இதேவேளை, தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திற்கும் கட்சி பொதுச் செயலாளர்களுக்கும் இடையில் எதிர்வரும் ஒகஸ்ட் 3ம் திகதி சந்திப்பொன்று இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply