அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்! ஒபாமா, ரோம்னி இடையே கடும் போட்டி

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பான கருத்து கணிப்புகளில் எதிர்க்கட்சி வேட்பாளர் ரோம்னியை விட மிக குறைந்த வித்தியாசத்தில்தான் ஒபாமா முந்தி வருகிறார்.இதனால் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 6ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது.

இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் பராக் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். அவருக்கே மீண்டும் வெற்றி வாய்ப்பு உள்ளதாக ஆரம்பத்தில் வெளியான கருத்து கணிப்புகள் தெரிவித்தன.

ஆனால் தேர்தலுக்கு இன்னும் 100 நாட்களே உள்ள நிலையில், சமீபத்தில் வெளியான கருத்து கணிப்புகளில் எதிர்க்கட்சியான குடியரசு கட்சியின் வேட்பாளர் ரோம்னிக்கும் சமவாய்ப்பு உள்ளதாக தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் 7 முன்னணி நிறுவனங்கள் நடத்திய கருத்து கணிப்பில் 6ல் ஒபாமா முந்தினார். ஒன்றில் ரோம்னி முந்தினார்.

ஆனாலும், ரோம்னியை விட ஒபாமா மிகக் குறைவான வித்தியாசத்திலேயே முந்தி வருகிறார். ரியல்கிளியர் பாலிடிக்ஸ் அமைப்பு வெளியிட்ட ஆய்வறிக்கையில், கணிப்புகளின் சராசரியை பார்த்தால் ரோம்னியை விட 1.6 புள்ளிதான் அதிகமாக கிடைத்துள்ளது என்றும், இதனால் ரோம்னிக்கும் சமவாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், ஒபாமாவின் தலைமை பிரசார ஆலோசகர் ராபர்ட் கிப்ஸ் நேற்று கூறுகையில், ‘இந்த போட்டி மிக கடுமையான போட்டியாக இருக்கும்.

இருவருக்கும் இடையே நெருக்கமான போட்டிதான். இருவேறு கருத்துகளை கொண்ட இருவரில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது கணிக்க முடியாத நிலை உள்ளது. எனவே நாங்கள் பிரசாரத்தை தீவிரப்படுத்தியுள்ளோம்’ என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply