ராஜீவ் கொலை குற்றவாளிகளின் கருணை மனு பிரணாப்பிடம் ஒப்படைக்கப்படும்
இந்தியாவின் புதிய குடியரசுத் தலைவராக பதவியேற்றிருக்கும் பிரணாப் முகர்ஜியிடம், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகியோரின் கருணை மனு ஒப்படைக்கப்படும் என இந்திய ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் மரண தண்டனையினை இம்மூவரும் எதிர்கொண்டுள்ளனர்.
இந்த மூவரின் மரதண்டனைக்கு எதிராக தமிழகம் மற்றும் சர்வதேச தரப்பினர் குரலெழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில் ஆளும் ஐக்கிய முற்போக்கு முன்னணி அரசாங்கத்தின் பங்காளிக் கட்சியான தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி, இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பாக மரணதண்டனை அளிக்கப்பட்டவர்களுக்கு எதிரான தமது கட்சியின் வலியுறுத்தல் தொடர்ந்து இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்தில் தனது நிலைப்பாடு குறித்து தான் ஏற்கனவே அறிவித்துள்ளதாகவும், பொதுவாக தான் மரணதண்டனைக்கு எதிரானவர் என்றும் கருணாநிதி கூறியுள்ளார்.
பேரறிவாளன் மற்றும் ஏனையோரின் மரண தண்டனை விவகாரம் குறித்து தனது கோரிக்கையை தமது கட்சி ஏற்கனவே சமர்ப்பித்துள்ளது.
அந்தக் கோரிக்கை தொடர்ந்தும் இருக்கும் என்று கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply