தரம் குறைந்த எரிபொருள் பாவனை! கெமுனு விஜேரத்ன குற்றச்சாட்டு
தரம் குறைந்த எரிபொருள் பாவனை காரணமாக 50 க்கும் அதிகமான பஸ்களில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிடுகின்றது.
இதன் காரணமாக பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளதாக சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
கடந்த இரண்டு, மூன்று தினங்களில் மாத்திரம் தூர சேவையில் ஈடுபடும் பஸ்களில் அதிகளவில் கோளாறுகள் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
பஸ்களில் கோளாறுகள் ஏற்படும் பட்சத்தில் அவற்றை திருத்துவது கடினம் என்பதால், எரிபொருள் தரம் தொடர்பில் தமக்கு தெளிவூட்டுமாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.
தரம் குறைந்த எரிபொருள் பாவனையால் ரயில் எஞ்ஜின்கள் பல செயலிழந்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளது.
இதன் காரணமாக நேற்றைய தினம் மாத்திரம் 15 ரயில் எஞ்ஜின்கள் செயலிழந்ததாக அகில இலங்கை பொது ஊழியர்கள் சங்கத்தின் பிரதான செயலாளர் சுமதிபால மானவடு குறிப்பிட்டார்.
நெருக்கடிகளைத் தோற்றுவித்துள்ள எரிபொருள் வகையை மீண்டும் பரிசோதனை செய்வதற்கு பெற்றோலிய வளத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.
இதற்கமைய குறித்த எரிபொருள் வகையின் மாதிரிகள் சில வெளிநாட்டிலுள்ள இரசாயன ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டது.
இதேவேளை இந்த விடயம் தொடர்பில் கண்டறிவதற்காக பெற்றோலிய வளத்துறை அமைச்சின் செயலாளரால் மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவில் அமைச்சின் பிரதான கணக்காய்வாளர், இரசாயன பொறியியலாளர் மற்றும் இயந்திரவியல் பொறியியலாளர் ஆகியோர் அடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டு வாரங்களில் குறித்த குழுவினால் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பெற்றோலிய வளத்துறை அமைச்சு மேலும் குறிப்பிட்டது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply