துப்பாக்கி காரணமாகவே இலங்கையில் முறையற்ற நிர்வாகம் ஏற்பட்டது!
இந்த நாட்டில் வடக்குகிழக்கு தென்பகுதி என்ற அடிப்படையில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தனர்.
எனினும் சந்தர்ப்பவாத அரசியல் காரணமாக பொதுமக்கள் மத்தியில் பாரிய பிளவுகள் ஏற்பட்டன என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளிகளுக்கு இலகுக்கடன்கள் வழங்கும் நிகழ்வு நேற்று அலரிமாளிகையில் நடைபெற்ற வேளையில் ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார்.
துப்பாக்கி காரணமாகவே இலங்கையில் முறையற்ற நிர்வாகம் ஏற்பட்டது. இந்தநிலையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களை புலம்பெயர்ந்தவர்கள் பார்க்க வேண்டியதில்லை.
அவர்களை இலங்கை அரசாங்கமே பொறுப்பேற்று நடத்த வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply