சந்திரிக்காவுக்கு உளவு வழங்கினர் ரணில்
1994 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் காமினி திஸாநாயக்கவை தோற்கடிப்பதற்காக, பொதுஜன ஐக்கிய முன்னணிக்கு தகவல் வழங்கியவர் குறித்த தகவல்கள் இன்று வெளியாகின.
அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இந்த தகவல்களை வெளியிட்டார். காமினிதிஸாநாயக்கவை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காக, எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவே இந்த தகவல்களை வழங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணியின் உறுப்பினர்களுக்கு அவர் இந்த தகவல்களை வழங்கியதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதனை ஆதாரங்களுடன் நரூபிக்க தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply