நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துவது எவ்வாறு ? இராஜதந்திரிகளுக்கு விளக்கம்
இலங்கையில் மோதல்களுக் குப் பின்னர் மிக குறுகிய காலத்திற்குள்ளாக அடிப்படை மட்டத்தில் செய்யப்பட்டிருக்கும் அபிவிருத்திப் பணிகள் உலகின் ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சாதனைகளாக கருதப்பட வேண்டியவையென அரசாங்கம் நேற்று வலியுறுத்தியுள்ளது.
வெளிவிவகார அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க ஆகியோர் நேற்று (31) வெளிவிவகார அமைச்சில் இராஜதந்திரிகளை சந்தித்து இது தொடர்பில் விளக்க மளித்திருந்தனர்.
இதன் போது நல்லிணக்க ஆணைக் குழுவின் பரிந்துரைகள் செயற்படுத்தப்படும் விதம் குறித்து விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
பரிந்துரைகளுக்கமைய இதுவரை சாதிக்கப்பட்டவை, எதிர்காலத்தில் ஒன்றிணைந்த மட்டத்தில் நடைமுறைப் படுத்தப்படவுள்ளவை, இவற்றுள் கூடுதல் முக்கியத்துவமளிக்கப்படுபவை, அவற்றை பொறுப்பேற்று செயற்படுத்தவுள்ள நிறுவனங்கள், குறித்த செயற்திட்டத்திற்கு பொறுப்பு கூறுபவர்கள், காலவரையறை ஆகியன குறித்தும் இராஜதந்திரிகளுக்கு எடுத்துக் கூறப்பட்டது.
நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தலைமையில் நிலைநிறுத் தப்பட்டிருக்கும் விசேட குழுவினாலேயே நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென அமைச்சரவை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே தீர்மானித்திருந்ததாகவும் அமைச்சர் பீரிஸ் இதன் போது சுட்டிக் காட்டினார்.
மேலும் இக் குழுவினரால் தயாரிக் கப்பட்ட அமைச்சரவைப் பத்திரத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அமைச்சரவையில் முன்வைத்ததையடுத்து அமைச்சரவை அதற்கு அங்கீகாரம் அளித்திருப்பதாகவும் அமைச்சர் பீரிஸ் குறிப்பிட்டார்.
இதேவேளை இது தொடர்பான விரிவான விளக்கத்தினை அமைச்சர் பீரிஸும் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் இணைந்து நடத்திய பத்திரிகையாளர் மாநாட்டில் உள்நாட்டு மற்றும் சர்வதேச செய்தியாளர்களுக்கு வழங்கியிருப்பதாகவும் அவர் கூறினார்.
அதேவேளை இராஜதந்திரிகளு டனான நேரடிச் சந்திப்பினூடாக இது குறித்து அறியத்தரவேண்டியதன் அவசியம் பற்றி அப்போதே நாம் உணர்ந்திருந் தோமெனவும் அமைச்சர் தெரிவித்தார்.
பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து விளக்கமளித்த வீரதுங்க, குறுகிய கால திட்டங்கள் வெற்றியளித் திருப்பதாகவும் நீண்டகால செயற்திட்டங்கள் மிகவும் திட்டமிடப்பட்ட முறையில் செயற்படுத்தப்பட ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் கூறினார்.
இச்சந்திப்பின்போது அமைச்சர் பீரிஸ் மற்றும் லலித் வீரதுங்க ஆகியோர் இலங்கையில் மோதல்களுக்குப் பின்னர் மிகவும் குறுகிய காலத்திற்குள் அடிப்படை மட்டத்தில் நிலைநாட்டியிருக்கும் சாதனைகள், உலகின் ஏனைய நாடுகளின் அபிவிருத்திப் பணிகளுடன் ஒப்பிடுகையில் கூடுதல் முக்கியத்துவமளிக்கப்பட வேண்டியவையென வலியுறுத்தியிருந்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply