இதுவரை 110 முகவர்கள் பதிவு
இந்த வருடத்தின் முதல் எட்டு மாத காலப் பகுதியினுள், 110 வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர்கள், இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்துடன், தம்மை பதிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, சட்ட விரோதமாக செயல்பட்ட 13 வெளிநாட்டு வேலை வாய்ப்பு நிறுவனங்களின் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளதாக பணியகத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
முன்னர், சட்ட விரோதமான முறையில், செயல்படும் முகவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் டிலான் பெரேரா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதேவேளை, பாரசீக குடாநாடுகளில் மேலும் அதிக எண்ணிக்கையிலான இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கும் முகமாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கு அமைய அந்த நாடுகளில், வீதி பிரசார நடவடிக்கைகளை விரைவில் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக இந்த வீதி பிரசார நடவடிக்கைகள் மூலம் சவுதி அரேபியா, குவேற், ஜோடான், ஒமான், கட்டார் மற்றும் பஹரேன் அகிய நாடுகளில், கல்வியுடன் தொடர்பான மற்றும் பயிற்றப்பட்ட பல்வேறு வேலை வாய்ப்புக்களை இலங்கையர்களுக்கு பெற்றுக் கொடுக்க முடியும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply