டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் காங்கிரஸுக்கு உடன்பாடு
மறைந்த காங்கிரஸ் தலைவர்கள் சத்தியமூர்த்தியின் 125-வது பிறந்த நாள், ஜி.கே.மூப்பனாரின் 81-வது பிறந்த நாள் விழாக்கள் காங்கிரஸ் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் இன்று கொண்டாடப்பட்டது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தலைமையில் இருவரது உருவ படங்களுக்கும் மாலை அணிவித்து காங்கிரசார் மரியாதை செலுத்தினார்கள்.
பின்னர் ஞானதேசிகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
டெசோ மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட பல தீர்மானங்களில் எங்களுக்கும் உடன்பாடு உண்டு. இலங்கையில் தமிழர்களும் சம உரிமையுடன் வாழ்வது, ராணுவத்தை திரும் பெறுதல் போன்ற நடவடிக்கையை நாங்களும் வலியுறுத்துகிறோம்.
தமிழர்கள் வாழும் பகுதியில் ரெயில் பாதைகள் அமைக்கும் பணி மத்திய அரசு உதவியுடன் நடக்கிறது. தமிழர்கள் மறு வாழ்வுக்காக மத்திய அரசு தேவையான உதவிகளை செய்து வருகிறது. இவ்வாறு கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply