பிரித்தானியா வெளியிட்டுள்ள பயண அறிவுறுத்தல் தொடர்பில் விளக்கம் தேவை – இலங்கை
பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளுக்காக பிரித்தானியா வெளியிட்டுள்ள புதிய பயண அறிவுறுத்தல் தொடர்பில் இலங்கை கண்டனம் வெளியிட்டுள்ளது.
இலங்கையில் பாரிய அளவில் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்களும், இனவாத சம்பவங்களும்; அதிகரித்துள்ளதாக, பிரித்தானியா நேற்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் வெளிநாட்டு சுற்றுப் பயணிகளுக்கு எதிரான வன்முறைகளும் அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் பிரித்தானியாவில் இருந்து இலங்கை வருகின்ற சுற்றுப் பயணிகள், பாலியல் துஸ்பிரயோகங்கள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு கோரப்பட்டிருந்தது.
குறிப்பாக பிரித்தானிய பெண்கள் இலங்கையில் தனியாக நடமாட வேண்டாம் எனவும், எங்கு செல்கின்ற போதும், ஆயுதங்களையும், அவர்கள் செல்லும் இடங்களை அறிந்துக் கொள்ளும் கருவிகளைக் கொண்டிருக்குமாறும் இந்த சுற்றறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வெளியுறவுகள் துறை அமைச்சின் செயலாளர் கருணாதிலக அமுனுகம,
பிரித்தானியாவின் இந்த பயண அறிவுறுத்தல் தொடர்பில் அவதானமாக இருப்பதாகவும், இவ்வாறான அறிவுறுத்தலை வெளியிட்டமைக்கான காரணங்களை, பிரித்தானியாவிடம் இலங்கை கோரி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரையும் இது தொடர்பில் பிரித்தானிய அரசாங்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளாகவும் அமுனுகம குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply