புதுக்குடியிருப்பில் மீள்குடியமர்ந்த குடும்பங்களுக்கு காணிகள்

புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் மீள்குடியமர்ந்த 50 குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்காகக் காணிகள் வழங்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் எஸ்.ஜெயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதற்கான சகல ஒழுங்குகளையும் மேற்கொண்டுள்ளதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்ட மக்கள் தங்கள் காணிகளைத் துப்புரவு செய்வதில் ஈடுபட்டுவருவதாக அவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பிரதேசத்திலிருந்து இடம்பெயர்ந்து செட்டிக்குளம் அகதி முகாம்களில் தங்கியிருந்த புதுக்குடியிருப்பு மேற்கு, புதுக்குடியிருப்பு கிழக்கு ஆகியகிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த குடும்பங்கள் புதுக்குடியிருப்பு பிரதேசத்துக்கு அழைத்து வரப்பட்டு சொந்த இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளார்கள்.

மீள்குடியமர்த்தப்பட்ட இவர்களில் புதுக்குடியிருப்பு மேற்கைச் சேர்ந்த 36 குடும்பங்கள், புதுக்குடியிருப்பு கிழக்கைச் சேர்ந்த 14 குடும்பங்கள் சொந்தக் காணியில்லாமல் வாழ்விடங்களை அமைக்க முடியாமல் திண்டாடிவந்தனர்.

இவர்களின் நிலைப்பாடு குறித்து புதுக்குடியிருப்பு பிரதேசசெயலருக்கு அறியப்படுத்தியதைத் தொடர்ந்து அவர் எடுத்துக் கொண்ட உடனடி நடவடிக்கையால் கோம்பாவில் கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள திம்பிலிக் கிராமத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் 1/4 ஏக்கர் வீதம் வீடு கட்டுவதற்குக் காணி வழங்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply