கல்வியை அழிக்கும் அரசாங்கத்தின் பின்னணியில் சர்வதே சக்திகள்

கல்வியை பாதுகாப்பதற்காக நடத்தப்பட்டு வரும் போராட்டங்களின் பின்னணியில், எந்த சக்திகளும் இல்லை என ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார். எனினும் கல்வியை அழிக்கும் அரசாங்கத்தின் அமைச்சர்களின் பின்னணியில் உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியம் போன்ற வியாபாரிகள் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அரசாங்கம் தற்போதுஇ சகல அரச பல்கலைக்கழகங்களை மூடிவுள்ளது. பல்கலைக்கழகங்களை மூடும் அளவிற்கு நாட்டில் பிரச்சினைகள் ஏற்படவில்லை.

பல்கலைக்கழகங்களை நடத்த சந்தர்ப்பம் உள்ளது. பாரதூரமான பிரச்சினைகள் இல்லாத சூழ்நிலையிலேயே அரசாங்கம் இவ்வாறு பல்கலைக்கழகங்களை மூடியுள்ளது. உயர்க்கல்வி அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி தன்னிச்சையாக அவர் பல்கலைக்கழங்களை மூடியுள்ளார்.

பல்கலைக்கழகங்களை மூட அரசாங்கம் எடுத்த தீர்மானித்த சந்தர்ப்பத்தில் கல்வி சம்பந்தமாக பல பிரச்சினைகள் இருக்கின்றன. உயர்தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களின் இஸட் புள்ளிகளில் அரசாங்கம் தவறு செய்ததால், பல்கலைக்கழகங்களுக்கு செல்ல முடியாது மாணவர்கள் நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அரசாங்கம் அந்த தவறை திருத்த வேண்டியுள்ளது.

மறுபுறம் மொத்த தேசிய வருமானத்தில் கல்வித்துறைக்காக 6 வீதத்தை ஒதுக்குமாறு கோரி, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராடி வருகின்றனர். அரசாங்கம் தற்போது செய்ய வேண்டியது பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதாகும். தீர்வுகளை வழங்குவதற்கு பதிலாக அரசாங்கம் மாறான தீர்மானங்களை எடுத்து வருகிறது. தீர்வு வழங்குவதற்கு பதிலாக பல்கலைக்கழகங்களை மூடியுள்ளது.

அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையானது வயிற்று வலி ஏற்பட்டவருக்கு கழிவறை கதவை மூடுவது போன்ற நடவடிக்கையாகும். மிக முக்கியமான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கு பதிலாக பல்கலைக்கழகங்களை மூடுவதால், பிரச்சினைகளுக்கு தீர்வு ஏற்படாது. அரசாங்கம் இப்படியான தீர்மானங்களை எடுத்து கல்வித்துறை அழித்து வருகிறது எனவும் ரில்வின் சில்வா குற்றம்சுமத்தியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply