தமிழக மீனவர்கள் மீது கடற்படை மீண்டும் தாக்குதல்

சர்ச்சைக்குரிய கடல் எல்லையான கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் மீன்பிடிக்கும்போது அவர்களை இலங்கை கடற்படையினர் தாக்குவது தொடர் கதையாகி வருகிறது.

தமிழக மீனவர்களின் உயிருக்கும், உடமைக்கும் சேதம் விளைவிக்கும் இலங்கை கடற்படையின் அட்டகாசத்தை தடுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வர் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும் இதற்கு நிரந்தர தீர்வுதான் கிடைத்தபாடில்லை.

இந்த வாரத்தில் மட்டும் 2 முறை ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையின் தாக்குதலுக்கு இலக்காகி, பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நேற்று மீண்டும் ஒரு தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. கச்சத்தீவு
அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியதுடன், வலைகளையும் அறுத்து சேதப்படுத்தியுள்ளனர்.

இதையடுத்து உயிர் பிழைத்தால் போதும் என்று மீனவர்கள் அனைவரும் கரைதிரும்பினர். இதனால் மீனவர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply