ஒசாமா பின்லேடன் வேண்டடை! வெளிவரும் உண்மைகள்

அல்கொய்தா இயக்கத் தலைவரான ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கி தலைமறைவு வாழ்க்கை நடத்தியதை அறிந்த அமெரிக்க படைகள் கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் புகுந்து அதிரடி தாக்குதல் நடத்தி ஒசாமாவை வேட்டையாடியது.

பாகிஸ்தான் ராணுவத்தின் கண்ணில் மண்ணை தூவி விட்டு பாகிஸ்தானுக்குள் அமெரிக்க படைகள் புகுந்து நடத்திய இந்த சம்பவம் பாகிஸ்தான் ராணுவத்தினரையும் அரசையும் கடும் அதிர்ச்சி அடைய செய்தது.

இந்த நிலையில் அமெரிக்காவில் இருந்து வெளிவரும் ஒரு பத்திரிகையில் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் ராணுவ உதவியுடன் தங்கி வாழ்ந்து வருவதை அமெரிக்காவின் இஸ்லாமாபாத் பிரிவு சி.ஏ.ஐ.க்கு ஒசாமா கொல்லப்படுவதற்கு 5 மாதங்களுக்கு முன்பே பாகிஸ்தான் ராணுவ முதன்மை தளபதி ஆஷபாக் பர்வேஸ் கயானி தகவல் கொடுத்து உள்ளார்.

அமெரிக்க படைகள் அதிரடி நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான ஆலோசனைகளையும், திட்டங்களையும் அவர் வகுத்து கொடுத்து உள்ளார். அதில், ஒசாமா பின்லேடன் தங்கியிருந்த வளாகத்தை சீல் வைத்து, இரவு நேரத்தில் தாக்குதல் நடத்த வேண்டும் என்றும் அதில் அவர் தெரிவித்து உள்ளார். அவரது திட்டப்படி அமெரிக்கா தாக்குதல் நடத்தி பின்லேடனை கொன்றது.

இந்த தகவல் பாகிஸ்தான் உளவு அமைப்புக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்து உள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply