இரண்டு வருடங்களாக காணாமற்போன எலக்ஸ் கண்டுபிடிக்கப்பட்டார்
இரண்டு வருடங்களுக்கு முன்னர் மலேசியாவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு சென்ற இலங்கை அகதிகளின் பேச்சாளராக இருந்து, காணாமல் போயிருந்த எலக்ஸ் என்பர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
இந்த படகில் 254 தமிழ் அகதிகள் சென்றிருந்தனர். அவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற நிலையில் இந்தோனேசிய அதிகாரிகளால் இடைமறிக்கப்பட்டிருந்தனர்.
எனினும் நான்கு மாதங்களுக்கும் மேலாக அவர்கள் படகில் இருந்து வெளியேற மறுப்பு தெரிவித்துவந்தனர். இந்த காலப்பகுதியில் இலங்கை அகதிகளின் பேச்சாளராக அலக்ஸ் என்ற சன்ஜீவ் குஹேந்திரராஜா செயற்பட்டு வந்தார்.
எனினும் நான்கு மாதங்களின் பின்னர் அவர் படகில் இருந்து தப்பி சென்றார். அதன் பின்னர் அவர் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.
தற்போது அவர் தாய்லாந்தில் பெங்கொக் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக த ஹெரால்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அவர் இந்தோனேசிய அதிகாரிகளுக்கு ஆட்கடத்தல் காரர்கள் குறித்த முக்கிய தகவல்களை வழங்கியமைக்காக ஆட்கடத்தல் காரர்களால் அவருக்கு உயிராபத்து ஏற்பட்ட நிலையிலேயே அங்கிருந்து தாம் தப்பி சென்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தோனேசியாவில் இருந்து மலேசியாவுக்கு தொழிலாளர்களை கடத்தும் குழுவுடன் இணைந்து மலேசியாவுக்கு தப்பி சென்ற அவர் சுமார் ஒரு வருட காலமாக ஆட்கடத்தல் காரர்களிடம் இருந்து தலைமறைவாக வாழ்ந்து வந்ததாக தெரிவித்துள்ளார்.
அதன் பின்னர் மலேசியா – தாய்லாந்து காவற்துறையினரால் தாம் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் தமக்கு மூன்றாம் நாடு ஒன்றில் அகதி அந்தஸ்த்து வழங்குமாறு ஐக்கிய நாடுகள் சபைக்கு விண்ணப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply