இந்திய வங்கி பணிளர்களினால் 30 ஆயிரம் கோடி நட்டம்

இந்தியா முழுவதும் வங்கி பணியாளர்கள் இன்று இரண்டாவது நாளாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவதால் நாட்டின் பொருளாதாரத்தில் ரூ.30 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2 கோடி காசோலைகள் தேக்கமடையும் நிலை உருவாகியுள்ளது.

வங்கி பணிகளை தனியார் மயமாக்க மத்திய அரசு முயற்சிப்பதை கண்டித்தும், ஓய்வூதிய மறு பரிசீலனை, வாரிசுகளுக்கு வேலை உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் வங்கி ஊழியர்கள் நாடு தழுவிய 2 நாள் வேலை நிறுத்தத்தை நேற்று தொடங்கினர்.

சுமார் 10 இலட்சம் வங்கி பணியாளர்கள் கலந்து கொண்டுள்ள இவ்வேலை நிறுத்தத்தின் போது தமிழ் நாட்டிலும் முழு அளவில் வேலை நிறுத்தம் நடந்து வருகிறது.  தமிழ்நாட்டில் பொதுத்துறை வங்கிகளின் 7 ஆயிரம் கிளகளை சேர்ந்த 70 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்.  சென்னையில் மாத்திரம் 1400 வங்கியில் 13 ஆயிரம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply