கென்ய கலவரத்தில் 48 பேர் பலி! 31 பேர் பெண்கள்
கென்யா நாட்டில் 2007-ம் ஆண்டு தேர்தல் நடந்தது. அப்போது ஒரு சமூகத்தினர் ஒரு கட்சிக்கும், மற்றொரு சமூகத்தினர் இன்னொரு கட்சிக்கும் ஆதரவாக ஓட்டு போட்டனர். அப்போது இரு சமூகத்தினர் இடையே பயங்கர கலவரம் ஏற்பட்டது. அதில் நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
அதை தொடர்ந்து இருதரப்பினர் இடையேயும் அடிக்கடி மோதல் நடந்துவருகிறது. இந்த நிலையில் அங்குள்ள தனாரிவர் மாவட்டத்தில் மீண்டும் பயங்கர கலவரம் ஏற்பட்டது. அதில் 48 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர்.
கொல்லப்பட்டவர்களில் 31 பேர் பெண்கள், 11 பேர் குழந்தைகள், 6 பேர் ஆண்கள். இவர்களில் பெரும்பாலானோர் கத்தியால் குத்தி கொல்லப்பட்டனர். சிலர் எரித்து கொல்லப்பட்டனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடந்தனர்.
ஆயிரக்கணக்கான வீடுகள் தீவைத்து எரிக்கப்பட்டன. 2007-ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை நடந்த கலவரத்தில் மட்டும் 1200 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். 6 லட்சம் பேர் வேறு இடங்களுக்கு குடிபெயர்ந்து உள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply