நாட்டில் சுதந்திரமான தேர்தல் இல்லை
சுதந்திரமானதும் சாதாரணமானதுமான தேர்தல் ஒன்று இடம் பெறுவதற்கான சூழ்நிலை இல்லை என ஐக்கிய தேசிய கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
இந்த குற்றச்சாட்டை ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய முன்வைத்துள்ளார்.
தேர்தல் ஆணைக்குழு ஒன்று இல்லாது சுதந்திரமானதும் சாதாரணமானதுமான தேர்தல் ஒன்றை நடத்துவது கடினம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறுப்பட்ட கருத்துக்கள் காணப்பட்டாலும் வெற்றி பெறுவதே எங்களது குறிக்கோளாக உள்ளது.
மக்கள் விரும்பியவாறு வாக்களிக்கலாம். எனவே தற்சமயம் நிலவுகின்ற குளறுபடிகளுக்கு மத்தியில் மக்கள் எவ்வாறு வாக்களிக்க போகிறார்கள் என தெரியவில்லை.
இந்தநிலையில் சாதாரண தேர்தல் ஒன்று நடைபெறுவது சந்தேகமாகவுள்ளது. சுதந்திரமானதும் சாதாரனதுமான தேர்தல் ஒன்று என்றும் நடந்தததில்லை.
எனவே தேர்தல் ஆணைக்குழு ஒன்று இல்லாமல் இவற்றை அமுல்படுத்த முடியாது என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரிய சுட்டிக்காட்டியுள்ளார்
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.

Leave a Reply