மீள்குடியேற்றத்துக்காக இன்னமும் 994 பேர் மட்டுமே எஞ்சியுள்ளனர்

வடக்கின் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை எதிர்வரும் சில வாரங்களில் நிறைவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மீள்குடியேற்றத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

மனிதாபிமான நடவடிக்கைகளின் இறுதிகட்டத்தில் இடம்பெயர்ந்த சுமார் இரண்டு லட்சத்து 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வவுனியா மெனிக்பாம் உள்ளிட்ட முகாம்களில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டிருந்தனர்.

தற்போது 994 பேரைத் தவிர ஏனையவர்கள் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதாக மீள்குடியேற்றத்துறை அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இன்னமும் சில பகுதிகளில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படவுள்ளதாகவும், அவை நிறைவடையும் தருவாயில் துரித மீள்குடியேற்றத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply